காந்தி ஜெயந்தி: கோவையில் இறைச்சி விற்பனைக்கு தடை!!

தமிழகத்தில் கோவையில் அக்டோபர் 2 இறைச்சி விற்பனைக்கு கடைகளை மூட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினத்தில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இறைச்சி விற்பனை செய்வது கூடாது என கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அன்றைய தினத்தில் கடைகளையும் திறந்து வைக்கும் பட்சத்தில், கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் மதுரை மாவட்டத்திலும் காந்தி ஜெயந்தி தினத்தில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய உத்தரவானது பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.