தூக்குக்குடி துப்பாக்கி சூடு.. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் – முதல்வர் திட்டவட்டம்!!

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் போராட்டமானது 100-வது நாளை எட்டிய நிலையில் கடந்த 2018-ஆண்டு மே 22 தேதி பொதுமக்கள் பேரணியாக திரண்டனர்

இந்நிலையில் அமைதி பேரணியானது வன்முறையாக வெடித்தது. அப்போது போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன் உட்பட 13 பேர் பலியாகினர். இத்தகைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உச்சகட்ட பரபரப்பு!! ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு..!!

இதற்கிடையில் துப்பாக்கி சூடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, பெரியார் மொழியில் கூறினால் சமுக்காளத்தில் வடிகட்டியப் பொய் என்பதை விசாரணை ஆணையம் தெரிவித்து இருந்தது.

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை அப்டேட்!!

இந்த சூழலில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் நிர்வாகத்தை காக்கக்கூடிய அதிகாரிகள், சட்ட ஒழுங்கை காக்க கூடிய காவல்துறையினர் மனிதாபிமான அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்வதை தவிர, வேறு மாதிரியாக நடந்து கொள்வது மனித தன்மைக்கு விரோதமான செயல் என்பதை உணர வேண்டும் என கூறினார்.

அதேபோல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் கூண்டில் ஏற்ற படுவார்கள் என்றும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment