ரஷ்ய போருக்கு முடிவு கட்டுவோம்: ஜெலென்ஸ்கி திட்டவட்டம்..!!!

கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு உக்ரைனில் கீவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வணிக நகரங்கள் குண்டுவெடிப்பால் சாம்பலானது.

ரயில் முன் இளம்பெண் படுகொலை: இளைஞரை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு!!

இதனிடையே ரஷ்யாவை வீழ்த்த அதிக பணம் தேவைப்படுவதால் ஜெலென்ஸ்கி நிதியுதவி கோரியுள்ளார். அதன் படி, வாஷிங்டன்னில் நடைப்பெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வருடாந்திர கூட்டத்தில் நிதி அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஜெலென்ஸ்கி பேசினார்.

அப்போது உக்ரைனை மீண்டும் கட்டமைக்க பல லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதனிடையே உக்ரைனுக்கு எவ்வளவு நிதியுதவி கிடைக்கிறதோ? அந்த அளவிற்கு ரஷ்ய போரானது விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என கூறியுள்ளார்.

இறப்பு சான்றிதழ் வாங்க தனியாக வரவேண்டும்: தீயாய் பரவும் ஆடியோ!!

மேலும், இதுபோன்ற கொடூரமான போர் மற்ற நாடுகளுக்கும் பரவாத வகையில் விரைவில் நம்பகத்தன்மையுடன் உத்திரவாதம் அள்ளிக்க வேண்டும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment