ரஷ்யாவில் மீண்டும் முழு ஊரடங்கா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ரஷ்யாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை தோன்றி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தலைநகர் மாஸ்கோவில் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக கொரோனா பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள அரசு அலுவலகங்கள் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையில்லாமல் சாலைகளில் யாரும் நடமாடக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இதே ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் ரஷ்யாவில் மிக விரைவில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்திருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment