பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கா? விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தார் மா.சு!

நம் தமிழகத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை பல்வேறு கட்டுப்பாடுகள் மத்தியில் கொண்டாடப் பட உள்ளதாக காணப்படுகிறது. ஏனென்றால் பொங்கலன்று தமிழர்கள் கோவிலுக்கு செல்வர்.

ஆனால் இந்த ஆண்டு தமிழக மக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வழிபாடு தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் காணும் பொங்கல் அன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழா பல்வேறு கட்டுப்பாடுகள் மத்தியில் கொண்டாட்டம் இன்றியே காணப்படும் என்று விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் பொங்கல் முடிந்தவுடன் நிச்சயமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற பேச்சு வார்த்தைகளும் வதந்திகளும் இணையதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

இவை இணையதளத்தில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் பொங்கலுக்குப் பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அவசியமில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment