Connect with us

மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் பாதியிலே நின்றால் முழு கட்டணமும் வாபஸ்!!!

UGC

செய்திகள்

மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் பாதியிலே நின்றால் முழு கட்டணமும் வாபஸ்!!!

நடப்பு கல்வி என்று காண மாணவர் சேர்க்கையானது அனைத்து விதமான பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுகள் ஆனது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், சாதகமாகவும் அமைந்துள்ளது. அதன்படி பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் ஒருவேளை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினால் அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. சேர்க்கையை ரத்து செய்தால் மாணவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என்றும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

பொது நுழைவுத் தேர்வு எழுதுபவர் முன்னெச்சரிக்கையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதால் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யுஜிசியின் இத்தகைய உத்தரவால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top