ஏப்ரல்-26 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு..! அரசு அதிரடி அறிவிப்பு…

ஷாங்காய் நகரில் ஏப்ரல்-26 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் வணிகம் மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் நகரில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகன தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சீன அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. ஷாங்காய் , சாங்சுன் நகரங்களில் கொரோனா பரவல் தற்போது கோரத்தாண்டவமாடி வருகிறது.

இதனால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை வரும் 26- ஆம் தேதி வரியில் நீட்டிக்கப்போவதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் குறையும் பட்சத்தில் ஊரடங்கு தளர்வு படிபடியாக அளிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment