Connect with us

மீண்டும் முழு ஊரடங்கு: பொதுமக்கள் அதிர்ச்சி!

Tamil Nadu

மீண்டும் முழு ஊரடங்கு: பொதுமக்கள் அதிர்ச்சி!

59c303106b04eb7ca677d3eef998f436

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கிடைத்து உள்ளன என்பதும் தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கேரளாவில் மீண்டும் 3 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வார இறுதி நாட்களான சனி ஞாயிறு ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது 

அந்த வகையில் ஜூலை 31, ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய மூன்று நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனா வைரஸ் மட்டுமின்றி ஜிகா வைரஸ் பரவி வருவதை அடுத்தே இந்த ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top