சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலருக்கு தோற்று பரவி இருக்கக் கூடும் என கணிக்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாக விடுதியில் கடந்த 18- ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 நாட்களில் 30 நபர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அனைவரும் லேசான அறிகுறியுடன் இருப்பதால் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த தொற்று 4- வது அலையின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம் என கூறுகிறார் தொற்றுநோய் நிபுணர் சுரேஷ் குமார்.
இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம். இத்தகைய சூழலில் வெளிநாடுகளில் இருக்கும் வைரஸ் மற்றும் தமிழ் நாட்டில் இருக்கும் வைரஸ் இணைந்து எளிதில் உருமாற்றம் அடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அறிகுறி குறித்த புரிதல், உடனடி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி குறைந்த ஆட்கள் போன்ற காரணங்களினால் ஐ.ஐ.டி வாளாகத்தில் சவால்கள் குறைவு. ஆனால் தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவர்கள் சென்றுவந்துள்ள கடற்கரை, வணிக வளாகங்கள் போன்றவற்றால் கொரோனா பரவல் நிச்சயம் இருக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.