இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு ? ஒன்றிய அரசு அதிரடி!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது. இதனால் பல கோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமில்லாமல் பல லட்சம் நபர்களின் உயிரைப்பறித்தது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. இதனால் தற்போது தொற்று எண்ணிக்கை படிபடியாக குறைந்து கொண்டே வருகிறது.

இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்ற மார்ச் 31-க்குள் முடித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஆனால் முகக் கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற ஒரு சில கட்டுப்பாடுகளை மீண்டும் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment