Connect with us

எரிபொருள் பற்றாக்குறை: இனிமேல் 13 மணி நேரம் மின்வெட்டு தொடரும் !!

electric post

செய்திகள்

எரிபொருள் பற்றாக்குறை: இனிமேல் 13 மணி நேரம் மின்வெட்டு தொடரும் !!

எரிபொருள் பற்றாக்குறை: இனிமேல் 13 மணி நேரம் மின்வெட்டு தொடரும் !!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக  பெரும் பொருளாதார நெருக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் அப்பாவி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் இனிமேல் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கடும் விலைவாசி உயர்வு காரணமாக நெருக்கடியில் வாழும் சூழலில் தற்போது இந்த மின்வெட்டு அமல்படுத்தியது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் நீர் விநியோகம், போக்குவரத்து, வங்கி சேவைகள் என அத்தியாவசிய சேவைகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மின்வெட்டு தொடர்வதால் ட்ராபிக் சிக்னல்கள் செயலிழந்து வருகின்றன. இதனால் நாட்டின் பிரதான நகரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்ற பொருளாதர நெருக்கடி ஏற்பட்டாத நிலையில் தற்போது நிலவுவதால் தாங்கள் தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பதாக இலங்கை மக்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top