உயிர்களைச் சித்ரவதை செய்யும் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமா?

சின்ன வயசுல நாம நிறைய வேடிக்கையாக பல குறும்புகளைச் செய்து இருப்போம். ஐயய்யோ தெரியாம இந்த பாவத்தை செஞ்சிட்டேனே…இந்த எறும்பைக் கொன்னுட்டேனே…இந்த ஈயை அடிச்சிட்டேனே…இந்தக் கொசுவை அடிச்சிட்டேனே என நாம் சில நேரங்களில் வருந்துவதுண்டு. அதுவும் பாவச்செயல் தான். அதற்கு என்ன பரிகாரம் என்று நீங்கள் கேட்கலாம்.

பெரிதாக ஒன்றும் இல்லை. பழங்களைத் தானம் கொடுத்தால் போதும். அதற்காக பரிகாரம் உள்ளது என்று பாவத்திற்கு மேல் பாவங்களைத் தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இனி எப்படி பழங்களைத் தானம் செய்வது என்று பார்க்கலாம்.

பழங்களைத் தானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

நம் உணவுகளிலேயே சத்துவ குணங்கள் நிறைந்தது பழங்கள் தான். பழங்கள் என்றால் எல்லாவகையான பழங்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆப்பிள், வாழை, கொய்யா என சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த பழங்களைத் தானம் செய்வதால் கிடைக்கும் பலன் என்னவென்றால் உயிர்களைச் சித்ரவதை செய்யும் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும். நான் எந்த உயிர்களையுமே சித்திரவதை செய்யவில்லையே என நீங்கள் சொல்லலாம்.

நாம் சின்ன வயதாக இருக்கும்போது என்னென்ன உயிர்களை எல்லாம் எப்படி கொடுமைப்படுத்தி இருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் எறும்பு, வண்ணத்துப்பூச்சி, வெட்டுக்கிளி, தும்பி, ஈ, பூனை, ஓணான், கோழி, பறவை என நாம் சின்ன சின்ன சித்ரவதை செய்து விளையாடி இருப்போம். உண்டிவில்லால் அடித்து பறவைகளைக் கொன்று இருப்போம். தும்பியைப் பிடித்து அதன் வாலில் நூலால் கட்டி பறக்கவிட்டு இருப்போம்.

cockroach
cockroach

எறும்பு போகும் தடத்தை அழித்து விட்டுருப்போம். கட்டெறும்பு கடித்தால் கொன்று இருப்போம். கரப்பான் பூச்சி வீட்டில் வந்தால் அதை மருந்து அடித்துக் கொன்று இருப்போம். பல்லியை அடிக்கப் போய் அதன் வாலை அறுந்து விழச் செய்து இருப்போம். தூசு தட்டுகிறோம். ஒட்டடை அடிக்கிறோம் என்று எட்டுக்கால் பூச்சிகளைக் கொன்று இருப்போம். எத்தனையோ கொசுக்களை கையால் அடித்தேக் கொன்று இருப்போம்.

எத்தனையோ மூட்டைப்பூச்சிகளை நசுக்கிக் கொன்று இருப்போம். இப்படி எல்லாம் செய்வது கூட பாவமா என்று கேட்கலாம். நாம் சின்ன உயிர்களைக் கொன்றால் கூட பாவம் தான். எறும்பும் சிறு உயிர் தானே என நினைக்க வேண்டும்.

Ant line
Ant line

சின்ன சின்ன உயிர்களுக்குக் கூட நாம் எந்தத் தொல்லையும் கொடுக்கக்கூடாது. பாம்பன் சுவாமிகள் வரலாற்றில் ஒரு பகுதி உண்டு. ஒரு மூட்டைப்பூச்சி இறந்து விட்டது என்பதற்காக அந்த நாளில் தான் எடுத்துக் கொள்ளும் உணவைக்கூட எடுத்துக்கொள்ளாமல் அன்றைக்கு அந்த மூட்டைப்பூச்சிக்காக விரதம் இருந்தார்.

அப்படிப் பார்த்தால் நாம் மூட்டைப்பூச்சி போல எந்த ஒரு உயிருமே உயிர் தான். அதை சித்ரவதை செய்தால் கட்டாயம் அதற்குண்டான பலன் கிடைக்கும் என்பதை உணர வேண்டும். அதைப் போக்கவே இந்த பழங்களின் தானம். பழங்களைத் தானமாகக் கொடுக்கும் போது நமக்கு ஆயுள்விருத்தி, ஞானம் உண்டாகும்.

மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் இந்தத் தானத்தை செய்யலாம். அமாவாசை, பௌர்ணமி போன்ற விரத நாட்களில் இரண்டு வாழைப்பழத்தை பசு மாட்டுக்குக் கொடுக்கலாம். அல்லது யாராவது ஏழை ஒருவருக்கு நம்மால் முடிந்த 2 பழங்கள் வாங்கிக் கொடுக்கலாம்.

bananas
bananas

மருத்துவமனையில் எத்தனையோ நோயாளிகள் ரொம்ப துன்பத்தில் இருப்பாங்க. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, வாழைப்பழம் என எந்தப் பழங்களை நம்மால் வாங்க முடியுமோ அதை வாங்கிக் கொண்டு போய் அவர்களுக்குக் கொடுக்கலாம்.

கொடுக்கணும்னு முடிவு மட்டும் பண்ணுங்க. அதை யார் யாருக்குக் கொடுக்கணும் என்ற விடையும் நமக்குக் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews