பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்தது எந்த நகர மக்கள்.. முதல் 10 பட்டியலில் சென்னை இல்லையா?

இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் இந்தியாவில் உள்ள எந்தெந்த நகரங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

இதன்படி இந்தியாவில் பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்த மக்களில் நம்பர் ஒன் இடத்தை டெல்லி பிடித்துள்ளது. பங்குச்சந்தையின் தலைநகரம் மும்பை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் பெங்களூரு, புனே, சூரத், அகமதாபாத், ஜெய்பூர், நாக்பூர், மற்றும் கொல்கத்தா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் பெங்களூர் தவிர சென்னை உள்பட எந்த தென்னிந்திய நகரமும் இல்லை என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எந்தெந்த மாநிலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற பட்டியலில் தமிழ்நாடு 8வது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் மகாராஷ்டிரா, இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேசம் மற்றும் மூன்றாவது இடத்தில் குஜராத் உள்ளது. ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பிகார் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம்,உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித்து உள்ளது என்றும் அதேபோல் ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் தற்போது பங்குச்சந்தை முதலீடுகள் அதிகமாக வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews