நாளை முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்… முழு விவரம் இதோ..!

2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கு நாளை முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு வரும் எட்டாம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து பொது தேர்வு முடிவை அடுத்து மாணவர்கள் கல்லூரிகள் சேர முன்வருவார்கள். பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நிலையில் நாளை முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஆன்லைனில் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் .அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.tneaonline.org மற்றும் https://www.tndte.gov.in ஆகிய இரண்டு இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் இணையதள வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியாத மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் செயற்கை சேவை மையம் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட இணையதளங்களில் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறித்த முழு விவரங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மே ஐந்தாம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500 செலுத்த வேண்டும் என்றும் எஸ்சி எஸ்டி மாணவர்கள் 250 செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் பணம் செலுத்த இயலாத மாணவர்கள் The Secretary TNEA payable at chennai என்ற பெயரில் டிடி எடுத்தும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தில் ஒப்படைக்கலாம்.

விண்ணப்ப காலம் முடிவடைந்த பிறகு கலந்தாய்வு விவரங்கள் குறித்த அறிவிப்புகள் இணையதளங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் என்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது   சான்றிதழ்கள் சரி பார்க்கும் போது குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.