நாளை சமையல் கேஸ் விலை உயர்வா?

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் நாளையும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது

கடந்த ஒரு ஆண்டில் பல மடங்கு சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நாளையும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

அனேகமாக வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25ம், ஹோட்டலுக்கு சிலிண்டர் விலை ரூபாய் 75ம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

மேலும் நாளை முதல் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபரிடம் ஓடிடி எண் அளித்தால் மட்டுமே சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்றும் புதிய விதி அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment