Connect with us

நாளை முதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை உத்தரவு!

ac buses

News

நாளை முதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை உத்தரவு!

நாளை முதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை உத்தரவு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மே மாதம் முதல் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து கடந்த சில வாரங்களாக மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாளை முதல் ஏசி பேருந்துகளையும் இயக்க தமிழக அரசின் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சென்னை உள்பட 702 ஏசி பேருந்துகள் இருக்கும் நிலையில் இந்த பேருந்துகளை மாநிலத்திற்கு உள்ளும், மாநிலத்திற்கு வெளியேயும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

ac bus1நாளை முதல் தமிழகம் முழுவதும் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இந்த பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டுமென்றும் அதேபோல் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இவை இரண்டும் செய்தால் மட்டுமே ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

நாளை முதல் மீண்டும் ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ள செய்தி பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top