சென்னையில் இன்று முதல் அம்மா உணவகத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்!

தமிழகத்தின் இரும்பு பெண்மணி, அம்மா என்று மக்களால் அழைக்கப் பட்டவர் செல்வி ஜெ. ஜெயலலிதா.ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதிலொன்று அம்மா உணவகம்.

 அம்மா உணவகம்

இந்த அம்மா உணவகத்தின் மூலம் ஏழை, எளியவர்களுக்கு மிக குறைந்த விலையில் உணவு அளிக்கப்பட்டது. இதனால் அவர்கள் பசி பிணி இன்றி காணப்பட்டனர். இவை தற்போது உள்ள திமுக ஆட்சியிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக இந்த அம்மா உணவகத்தில் விலை இன்றி அனைத்து உணவுகளும் கொடுக்கப்பட்டது. ஏனென்றால் சென்னை மாநகரத்தில் பெய்த கனமழையால் சென்னை முழுவதும் மழை நீருக்குள் மூழ்கியது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த அம்மா உணவகத்தில் விலையில்லாமல் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அம்மா உணவகத்தில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னை அம்மா உணவகங்களில் இன்று முதல் வழக்கம்போல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள மீட்பு பணிகள் நிறைவடைந்தால் அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment