1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.. பள்ளிகள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு முடிவடைவதை அடுத்து நாளை முதல் கோடை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவு அடைந்ததை அடுத்து அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக முழு ஆண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் இன்றுடன் அந்த தேர்வு முடிவடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் அதாவது ஏப்ரல் 29 முதல்  1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

summer holidays2மேலும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறக்கப்படும் சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக அடித்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அது குறித்து அன்றைய சூழலில் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியிருந்தார். எனவே ஜூன் முதல் வாரம் வெயில் அடிக்கும் நிலையை பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் வெயிலில் அலையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக மே மாதம் அக்னி நட்சத்திரம் நேரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. பள்ளிகள் அனைத்திற்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews