இன்று முதல் நவம்பர் மாத இலவச தரிசன டோக்கன்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

இன்று முதல் ஆன்லைனில் நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும், முதலில் சில நாட்கள் நேரடியாக வழங்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் நவம்பர் மாத இலவச தரிசன டோக்கன்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினமும் 12 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தினசரி 8000, 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு கொரோனா வைரஸ் விதிமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment