Connect with us

இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு: எந்த நகரத்தில் தெரியுமா?

News

இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு: எந்த நகரத்தில் தெரியுமா?

da5de81fc2c5fb3a583ca704a52e8388

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மேலும் ஒரு சில நகரங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருப்பதி நகரில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு என சித்தூர் மாவட்ட கலெக்டர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனையடுத்து இன்று முதல் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்க அனுமதி என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்

திருப்பதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் உள்பட 15 அர்ச்சகர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top