1-8 வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் ஆர்வம்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் அதேபோல கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை வரவேற்க பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

600 நாட்களுக்கு பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டதை அடுத்து பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பள்ளிக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment