சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள்

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழக அரசின் போக்குவரத்து துறை இன்று முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் கோயம்பேடு உள்பட 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சிறப்பு பேருந்துகள் தேவைப்பட்டால் இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவில்லாத சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment