பி.இ, பி.டெக் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது என்பதும், அதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிஇ, மற்றும் பி.டெக் போன்ற படிப்புக்கான அட்மிஷன் சேர்க்கை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பிஇ, பிடெக் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இன்று கல்லூரிகளுக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment