News
டீக்கடை முதல் பிரதமர் வரை: பிரதமர் மோடி பிறந்த நாள்
டீ கடையில் பணிபுரியும் ஒரு சிறுவனாக வேலை பார்த்த மோடி, இன்று இந்தியாவின் பிரதமராக இருந்து வருகிறார். அவர் இன்று தனது 71 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அமைச்சர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று உண்மையான சமூக நீதிக்கான நாளென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டிய மோடி தற்போது இந்தியாவின் பிரதமராக கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
