Connect with us

தபால் ஓட்டு தொடங்கி மின்னணு ஓட்டு வரை; 3 அடுக்கு பாதுகாப்பு-மையத்துக்கு 500 போலீசார் பாதுகாப்பு!

election vote ballot.jpg.image .300.176

தமிழகம்

தபால் ஓட்டு தொடங்கி மின்னணு ஓட்டு வரை; 3 அடுக்கு பாதுகாப்பு-மையத்துக்கு 500 போலீசார் பாதுகாப்பு!

தபால் ஓட்டு தொடங்கி மின்னணு ஓட்டு வரை; 3 அடுக்கு பாதுகாப்பு-மையத்துக்கு 500 போலீசார் பாதுகாப்பு!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான எண்ணிக்கையானது பிப்ரவரி 22ஆம் தேதி அந்த நாளைய தினம் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து இன்று காலை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் புதிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை தினம் 268 மையங்களில் எண்ணப்படுகின்றன.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் என்று சொல்லக்கூடிய ரகசிய அறை சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்கு பெட்டிகள் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்ட ஏழைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

முதலில் தபால் வாக்குகள் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார். 38 மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

வார்டு வாரியாக முடிவுகள் கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சார வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

காவல்துறை உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி பற்றியும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top