இனிமேல் இந்த பிஸ்கட்-களின் விலை 15% உயரும்!! காரணம் தெரியுமா?
இந்தியாவில் மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் பார்லே, பிரிட்டானியா போன்ற பிஸ்கட்டுகளின் விலை 15% உயர வாய்ப்புள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்.எம்.ஜி என அழைக்கப்படும் அதிவேகமாக நுகரும், நுகர்வோர் பொருட்களின் விலையானதுகொரோனா ஊரடங்க்கு காரணமாக தடுமாற்றம் அடைந்துள்ளது.
இந்த சூழலில் ஏற்கனவே பொருளாதரம் மந்த நிலை, ஜிஎஸ்டி வரி போன்ற காரணங்களினால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குழந்தைகள் விரும்பும் மலிவு விலை மிட்டாய், சாக்லேட் போன்றவைகளின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விலையினை ஏற்றாத நிறுவனங்கள் பிஸ்கட் அளவினை குறைத்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்து வருகின்றன. இந்த சூழலில் தற்போது மூலப்பொருட்களின் விலையானது அதிகரித்துள்ளத்தாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பிரிட்டானியா, நெஸ்லே இந்தியா, டாபர் இந்தியா போன்ற நிறுவனங்கள் பிஸ்கட்களின் விலையினை 15 % சதவீதம் உயர்த்துவதாக தகவல்கள் வெளியாகியிள்ளது.
