புதிய திட்டம் தொடக்கம்: இனி டெல்லி தொடங்கி டேராடூன் வரை 2.50 மணி நேரத்தில் செல்லலாம்!

நம் இந்தியாவில் தற்போது மத்திய அரசாக செயல்பட்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி. அதனால் நம் இந்தியாவில் பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி. அவர் நாள்தோறும் புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார்.

மோடி

அதன் வரிசையில் உத்தரகாண்டில் புதிய திட்டம் ஒன்றை பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூபாய் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. ரூபாய் 8300 கோடி செலவில் டெல்லி தொடங்கி டேராடூன் இடையே பொருளாதார வழித்தடத்தை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.

கிழக்கு புறப்பகுதி விரைவுச்சாலை முதல் டேராடூன் வரை அமைக்கப்படும் சாலையால் பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விரைவு சாலை அமைந்ததால் டெல்லி தொடங்கி டேராடூன் வரை பயண நேரம் 6 மணி நேரத்துக்கு பதிலாக 2.50 மணி நேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment