
செய்திகள்
ஆட்டோ ஓட்டுனர் முதல் முதலமைச்சர் வரை!! யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?
இன்றைய தினம் மும்பையில் பெருத்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஏனென்றால் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்றைய தினம் முதல் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே அறிவிக்கப்பட்டார்.
மேலும் அவர் பற்றிய வாழ்க்கை வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 1964 ஆம் ஆண்டு பிறந்த ஏக்நாத் ஷிண்டே, பள்ளிப் படிப்பை கூட முடிக்க முடியாமல் ஆட்டோ ஓட்டி வந்தார்.
பால்தாக்கரே மீது கொண்ட அதீத ஈர்ப்பு காரணமாக 1980ஆம் ஆண்டு சிவசேனாவின் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் படிப்படியாக வளர்ந்த ஏக்நாத் ஷிண்டே 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உறுப்பினரானார்.
2009ஆம் ஆண்டில் அமைச்சர் பதவி தர காங்கிரஸ் வந்தபோதும் அதை நிராகரித்து சிவசேனா விலிருந்தார் ஏக்நாத் ஷிண்டே.
2019ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே முதலமைச்சரானதும் பொதுப்பணித்துறை ஏக்நாத் ஷிண்டே விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டாண இன்றைய தினம் முதல் ஏக்நாத் ஷிண்டேமுதல்வராக திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
