ஏப்ரல் 1 முதல் ஒரு சிலிண்டரின் விலை 500 ரூபாய் தான்: அதிரடி அறிவிப்பு!

தற்போதைய சிலிண்டரின் விலை ரூபாய் கிட்டத்தட்ட 1000 ரூபாய் என இருந்து வரும் நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சிலிண்டரின் விலை 500 ரூபாய் தான் என ராஜஸ்தான் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர் என்பது தெரிந்ததே.

தற்போது சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 1000 ரூபாய் என்பதால் நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜஸ்தானில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் தர உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் முன்னணியில் இந்த திட்டத்தை அவர் அறிவித்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்த மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்குகிறார் என்றும் ஆனால் அந்த எரிவாயு உருளை காலியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாய் என்ற அறிவிப்பை மத்திய பிரதேச மாநிலம் போல் மற்ற மாநிலங்களும் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.