News
2022 முதல் புத்தகங்களில் “ஒன்றிய அரசு” என்றே இடம்பெறும்!
தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த படி நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மேலும் இவரது தந்தையான மு கருணாநிதி தமிழகத்தில் மிகவும் பெயர் பெற்ற முதலமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
அந்த படி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரிசையாக நிறைவேற்றி வருகிறார். இதனால் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவர் முதல்வராக பொறுப்பேற்று இரண்டாவது மாதம் ஆகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சில தினங்களுக்கு முன்பாக சட்டசபை கூடப்பட்டது. அதில் ஒன்றிய அரசு என்று திமுக சார்பில் சொல்லப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் பல்வேறு கட்சிகளும் விமர்சனம் செய்தனர்.
ஆயினும் ஒன்றிய அரசு என்பது குறித்து திமுக அவனது தெள்ளத் தெளிவாகக் கூறியது இந்த சூழலில் தற்போது 2022ஆம் ஆண்டு முதல் பள்ளி புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்ற பெயர் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி 2022ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு என்றே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி முதல்வரை சந்தித்த பின் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்துள்ளார்.
