பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறிய ப்ரிட்ஜ்; அதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவம்!

விளாத்திகுளம் அருகே பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – விட்டில் யாரும் இல்லாததால் உயிர் தேசம் தவிர்க்கப்பட்ட சம்பவம் அதிர்ஷ்டவசமாக அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர், கிருஷ்ணவேணி தம்பதியினர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பாலா, என்ற மகனும் பூஜா, என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர் .

இந்நிலையில் ராமரும், கிருஷ்ணவேணியும் விவசாய பணிக்காக தோட்டத்திற்குச் சென்று விட மகனும் மகளும் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். இந்த சமயத்தில்  வீட்டில் யாரும் இல்லாதததால் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

இதனையெடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கு சென்று பார்த்தபோது தீப்பற்றி எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்தது உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். அப்போது வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி உள்ளது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் புத்தகங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்தம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.