
தமிழகம்
அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ்!! தேர்தல் ஆணையத்தில் நேற்று ஈபிஎஸ் தரப்பு;
அதிமுகவில் தற்போது தலைமை பதவிக்கான மோதல் வலுப்பெற்றதாக காணப்படுகிறது. இதில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் பிரிந்துள்ளதாக காணப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது ஓ. பன்னீர்செல்வத்தின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததாக தெரிகிறது.
அதன்படி வேட்பாளர்களுக்கு சின்ன வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் கடிதம் அனுப்பி இருந்ததை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார். மேலும் பெரும்பான்மை பொது உறுப்பினர்கள் ஆதரவு தமக்கு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் கட்டம் அடைந்துள்ளது. ஜூலை 11ஆம் தேதியில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்று அவை தலைவர் தமிழ் மகன் கூறியுள்ளார்.
அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் ஒற்றை தலைமை வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இருந்த 23 தீர்மானங்களும் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டுகோள் எடுத்துள்ளார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்ட முடிவெடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
