அரக்கோணம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்-மின்சார ரயில் சேவை பாதிப்பு!!

நாம் மூன்றுவிதமான பயணங்கள் மேற்கொள்கிறோம். தரைவழி, வான்வழி, கடல்வழி போக்குவரத்து ஆகும். இந்தநிலையில் தரைவழிப் போக்குவரத்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இது உள்நாட்டு போக்குவரத்து சேவையாகும்.

இதிலும் விலை குறைவாக மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் போக்குவரத்து சேவை என்றால் அதனை தொடர்வண்டி சேவை என்றே கூறலாம். ரயில் போக்குவரத்து பெரும்பாலும் விபத்துக்கள் ஏற்படுவது குறைவுதான்.

ஆயினும் அவ்வப்போது ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்படும். இந்த நிலையில் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. சென்னையிலிருந்து சென்ற சரக்கு ரயில் அரக்கோணம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து ரேணிகுண்டா செல்லும் சரக்கு ரயில் மோசூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டதால் சென்னை முதல் அரக்கோணம் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்டதால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை உடனடியாக சீர்படுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment