Connect with us

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராக பரவிய தகவல்! 35ம் யூடியூப் சேனல்கள் முடக்கம்!!

யூடியூப்

செய்திகள்

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராக பரவிய தகவல்! 35ம் யூடியூப் சேனல்கள் முடக்கம்!!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராக பரவிய தகவல்! 35ம் யூடியூப் சேனல்கள் முடக்கம்!!

தற்போது இந்தியாவில் அதிக அளவு தவறான செய்திகளை பரப்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தினை மையமாகக் கொண்டு தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர்.

ஊடகங்களிலும் அவ்வப்போது காணப்படுகிறது. இதற்கு நம் இந்திய அரசு வன்மையாக கண்டிக்கும். அதோடு மட்டுமில்லாமல் தவறான செய்திகளை பரப்பி வருபவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கும், அவர்களால் இயக்கப்படும் சேனல்களும் முடக்கப்படும்.

இந்த நிலையில் மத்திய அரசு 35 யூடியூப் சேனல்களை முடக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பாகிஸ்தானிலிருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூடியூப் சானல்களை முடக்கியுள்ளது மத்திய அரசு.

மேலும் இரண்டு ட்விட்டர் மற்றும் இரண்டு இன்ஸ்டாகிராம் பக்கங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு முகநூல் மற்றும் இரண்டு இணையதளங்களும் முடக்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top