Connect with us

சென்னை மக்களுக்கு இலவச வைஃபை வசதி: மாநகராட்சி அதிரடி திட்டம்!

Tamil Nadu

சென்னை மக்களுக்கு இலவச வைஃபை வசதி: மாநகராட்சி அதிரடி திட்டம்!

faf16851fbb82ce6af78af60026a39d2

சென்னை நகரில் உள்ள மக்களுக்கு இலவச வை-ஃபை வசதி செய்து கொடுக்க உள்ளதாக சென்னையில் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மொபைல் போன் ரீசார்ஜ் செய்வது தவிர இன்டர்நெட்டுக்கு என மாதந்தோறும் ஒரு பட்ஜெட் ஒதுக்க வேண்டிய நிலையில் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய திட்டத்தின்படி சென்னை மக்களுக்கு இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையின் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் இந்த இலவச வசதியை பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி ஸ்மார்ட் கம்பங்கள் அருகே சென்று மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும் பின்னர் அதில் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்தால் இலவச வைபை வசதியை 30 நிமிடங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை அடுத்து சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி கூறி வருகின்றனர். சென்னையில் உள்ள மக்களுக்கு இன்டர்நெட் மிகவும் அத்தியாவசியம் என்பதால் இந்த இலவச வைபை வசதி பெரும் பயன் உள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top