Connect with us

போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா நீங்கள்? இனி கட்டணமில்லாத இலவச பயிற்சி வகுப்புகள்…!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4

செய்திகள்

போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களா நீங்கள்? இனி கட்டணமில்லாத இலவச பயிற்சி வகுப்புகள்…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து சில மாதங்களில் தொடர்ந்து அரசுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, குரூப்-4 மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய போட்டி தேர்வுகளுக்கு இனி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏராளமான போட்டி தேர்வர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் தேர்வர்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே பயிற்சி வகுப்பில் பங்கேற்க போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 96 98 93 68 68 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 தேர்வுக்கான மாதிரி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் வாட்ஸ்அப் மூலமாக குறுந்தகவல் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொண்டு கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top