Connect with us

குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!! முதலமைச்சர் அதிரடி!!

Capture 40

செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!! முதலமைச்சர் அதிரடி!!

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் ஆட்சியை கைப்பற்ற அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ராகஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 1 கோடி 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதோடு மூன்று ஆண்டுகளுக்கு இலவசமாக நெட்வொர்க் வசதி செய்து கொடுக்கப்படும் என கூறியுள்ளார். இத்தகைய ஸ்மார்ட்போன்களில் இரண்டு சிம் பயன்படுத்தாம் என்றும் கூறி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இத்தகைய திட்டத்திற்கு 3 தொலைதொடர்பு நிறுவனங்கள் முன்வந்து இருப்பதாகவும் விரைவில் ஒன்றுமட்டும் தேர்வு செய்யப்பட இருப்பதாக முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் இத்தகைய அறிவிப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top