நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட்போன் இலவசம்!!!

நம் இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் சர்ச்சைக்குரிய மாநிலமாக காணப்படும் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.பிரியங்கா காந்தி

இந்த உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சில முக்கிய அறிவிப்புகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் கூறியுள்ளார்.

அவை பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டு கூறப்பட்டதாக காணப்படுகிறது. அதன்படி  உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். பிளஸ் டூ மாணவிகளுக்கு ஸ்மார்ட் போனும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டி இலவசமாக வழங்குவோம் என்று அவர் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் 40 சதவீத தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதனால் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் பெண்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை மனு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment