Connect with us

இலவச திட்டங்களால் கிராமப்புற மக்களுக்கு பலன்: உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து!!

Supreme Court

செய்திகள்

இலவச திட்டங்களால் கிராமப்புற மக்களுக்கு பலன்: உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து!!

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் வந்தது.

அப்போது பேசிய நீதிபதி இலவசங்கள் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யப்பட்டால் மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்க முடியும்? என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதோடு இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில் பெரும்பாலான கட்சிகளும் ஒன்றாக இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தேர்தல் நேரங்களில் இலவச அறிவிப்புகள் குறித்து வெளியிடுவதை தடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில்வாதிடப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணையானது மீண்டும் நாளைய தினம் நடைப்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top