‘இலவச’ வாக்குறுதிகளை தடுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!
இந்தியாவில் தேர்தல் என்றால் பல கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை ஏராளமாக குவித்து வருவார்கள். அதிலும் குறிப்பாக பல இலவசத் திட்டங்களை அவர்கள் அறிவிப்பார்கள். ஒருவேளை அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த இலவசத் திட்டங்களால் மாநில நிதி பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன்படி தேர்தல் ஆதாயத்திற்காக சில கட்சிகள் இலவசங்களை தருவதாக வாக்குறுதி அளித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இலவசத் திட்டங்களால் மாநில அரசின் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும் என பாஜக சேர்ந்த வழக்கறிஞர் வாதம் புரிந்தார். இலவசம் தொடர்பான வாக்குறுதிகளை தடுக்க அதனை முறைப்படுத்துவது கோரிக்கை வைத்தார்.
இதற்கு தேர்தல் ஆணையமும் பதில் வாதம் புரிந்தது. அதன்படி இலவசங்கள் பற்றி அறிவிப்பதும் வழங்குவதும் சம்பந்தப்பட்ட கட்சியின் கொள்கை முடிவு என்று கூறியது. இலவசத் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளை முறைப்படுத்த இயலாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
