இலவச பொங்கல் வேட்டி,சேலைகள்: எங்கு உற்பத்தி தெரியுமா?

பொங்கலுக்கு அரசால் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைத்தாரர்கள், விதவைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக நடப்பாண்டில் ஒரு கோடியே 80 லட்சத்து 41 ஆயிரத்து 698 சேலைகளும், ஒரு கோடியே 80 லட்சத்து 280 வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரசு சார்பில் ஆர்டர்கள் வழங்கப்பட்டது.

கோவையில் பயங்கரம்! ஈஷாவில் யோகா பயிற்சிக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு!!

இவற்றில் 90% வேட்டி, சேலைகள் ஈரோடு மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ளவைகள் கோவை, திருப்பூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய பகுதிகளில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே நெசவாளர்களிடன் நேரடியாக கொள்முதல் செய்யப்படும் வேட்டி, சேலைகள் சீலிடப்பட்டு பண்டுல்களாக மாற்றி அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பட்டு வருகின்றனர். தற்போது 60% அனுப்பி வைத்துள்ளதாக கூறிய நெசவாளர்கள் எஞ்சியவற்றை விரைவில் அனுப்பி விடுவோம் என கூறுகின்றனர்.

சிலிண்டர் விலை எதிரொலி: ஹோட்டல், டீ விலை உயரும் அபாயம்!!

மேலும், நூல் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் இலவச வேட்டி, சேலை திட்டம் பெரிதும் கைகொடுத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.