Connect with us

தடை செய்யப்பட்டும் ஃப்ரீ பயர் கேம் எப்படி கிடைக்கிறது? – ஐகோர்ட் கிளை கேள்வி!!

Garena Free Fire

தமிழகம்

தடை செய்யப்பட்டும் ஃப்ரீ பயர் கேம் எப்படி கிடைக்கிறது? – ஐகோர்ட் கிளை கேள்வி!!

ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

நாகர்கோயிலை சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் தனது மகளை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதேசமயம் பப்ஜி ஃப்ரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருந்ததால், இதன் மூலம் ஜப்தீன் என்பர் மூலம் பலக்கம் ஏறப்பட்டதாகவும், இவருடைய நண்பருடன் சேர்ந்து கடந்தல் சம்பவம் நடைப்பெற்றதாக கூறினார்.

இதனால் தனது மகளை மீட்டு தரவேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் எவ்வாறு ஆன்லைனில் கிடைக்கிறது என கேள்வியெழுப்பி உள்ளனர்.

அதே போல் சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் இது போன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளனர்.

மேலும், தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top