மூன்று வேளாண் திட்டம் ரத்து குறித்து ஒப்புதல்! அடுத்த நான்கு மாதங்கள் வரை தானியம் இலவசம்!!

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அமைச்சரவை கூடியது. இதில் சில நாட்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த மூன்று வேளாண் திட்டம் ரத்து செய்வது குறித்தான ஒப்புதல் நடைபெற்றது.

 நாடாளுமன்றத்தில் அமைச்சரவை

அதன்படி மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முழுமனதாக ஒப்புதல் செய்யப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மூன்று சட்டங்களை ரத்து செய்யும் மசோதா முன்னுரிமை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி ஏழை மக்களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்த 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் திட்டம் தொடரும் என்று கூறப்பட்டது. இதனால் 80 கோடி பேருக்கு இலவச உணவு தாருங்கள் அடுத்த ஆண்டு மார்ச் வரை வழங்கப்படும் என்று அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

இந்த இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் இன்னும் நான்கு மாதங்களுக்கு தொடரும் என்று அமைச்சரவையில் முழுமனதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment