இரண்டாவது தடுப்பூசி போட்டால் இலவச ஃப்ரிட்ஜ், டிவி: பீகார் அரசு!

நம் இந்தியாவில் தற்போது 120 கோடி வரை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு பெரிதும் உதவியது கொரோனா தடுப்பூசி முகாம்கள் தான். இருப்பினும் முதல் தடுப்பூசியை விட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படுகிறது.

covidd 1

இதனால் தமிழகத்தில் இரண்டாம் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தொடர்ந்து  இந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் இரண்டாம் தவணை செலுத்த அம்மாநில அரசு புதுவிதமான முறையை கையாண்டுள்ளது.

அதன்படி பீகாரில் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு இலவச ப்ரிட்ஜ் கிடைக்கும் என்று பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. ஏனென்றால் பீகார் மாநிலத்தில் இரண்டாம் தவணை செலுத்தியவர்களின் எண்ணிக்கை தொகை மிகக் குறைவாக காணப்படுகிறது.

இதனை ஈடு செய்யும் வகையில் இத்தகைய அறிவிப்பினை பிகார் மாநில அரசு கூறியுள்ளது. அதன் வரிசையில் பீகாரில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு குலுக்கல் முறையில் இந்த இலவசப் பொருள்கள் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிரிட்ஜ் மட்டுமின்றி டிவி உள்ளிட்ட பொருட்கள் ஒரு நபருக்கு பரிசாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment