Connect with us

ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு !! – அமைச்சர் செந்தில் பாலாஜி…

Farmer

தமிழகம்

ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு !! – அமைச்சர் செந்தில் பாலாஜி…

நிலக்கரி பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அதிகமான இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இந்நிலையில் சட்டசபையில் மின்சாரத் துறை    மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2018 ஆண்டில் 59 மணி நேரம், 2019 ஆண்டில் 39 மணி நேரம் என கடந்த ஆட்சி காலங்களில் மின்வெட்டு இருந்ததை சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டதை தெரிவித்த அவர் முதல்வரின் செயல்பாட்டால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்ட போதும் இரண்டே நாட்களில் சரிசெய்யப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டில் மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் அமைச்சர் செந்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்காகவும், விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தக்கூடிய நோக்கில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top