வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்!

ஜனவரி இரண்டாம் தேதி வைகுண்ட ஏகாதசி திருநாள் அனைத்து பெருமாள் கோயிலிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திருப்பதியில் மிக சிறப்பாக வைகுண்ட ஏகாதேசி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி தினத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 9 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் 9 இடங்களில் இலவச டோக்கன்களை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜனவரி 2 முதல் 11-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச டோக்கன் வழங்கப்படும் இடங்கள் குறித்த தகவல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

குண்ட ஏகாதசி தினத்தில் இலவச டோக்கன் பெற அதிக பக்தர்கள் முன் வருவார்கள் என்பதால் இந்த சிறப்பு ஏற்பாட்டை திருப்பதி தேவஸ்தானம் செய்து உள்ளது. மேலும் இந்த நாட்களில் வைகுண்ட வாயில் வழியாகவே வழிபாட்டுக்காக பக்தர்கள் அனுப்பப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.