இன்று முதல் ஆன்லைனில் மட்டுமே இலவச தரிசன டோக்கன்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

1e8bb52c05c1e129c203f60b10067d16

இன்று முதல் ஆன்லைனில் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருமலை திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் தினசரி 8000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த டோக்கன்களை வாங்குவதற்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை கூடி வருவதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக இலவச டோக்கன்களை ஆன்லைனில் வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே முதல் முறையாக இலவச தரிசன டோக்கன் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் வழங்கப்படும் என்றும் இன்று காலை 9 மணி முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது   

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment