Connect with us

இன்னும் ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு எல்லாம் இலவச சைக்கிள்!!-அரசு ஏற்பாடு;

free cycle

தமிழகம்

இன்னும் ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு எல்லாம் இலவச சைக்கிள்!!-அரசு ஏற்பாடு;

எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் நம் தமிழகத்தில் தான் அடுத்தடுத்த அறிவிக்கப்படும். அதுவும் குறிப்பாக மாணவர்களுக்கு வரிசையாக இலவச பொருட்களை நம் தமிழக அரசின் சார்பில் இருந்து வழங்கப்பட்டு வரும்.

அவற்றில் ஒன்றுதான் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி திட்டம். இது திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நம் தமிழகத்தில் தொடர்ந்து செயலில் உள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் இலவச சைக்கிள் தர அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளது.

11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தர  6,18,101 இலவச சைக்கிள்களை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளுக்கு தனித்தனியே உதிரி பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சைக்கிள்கள் தயாராகிக் கொண்டு வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top