நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, இலவச பாட புத்தகங்கள், உதவி தொகை போன்றவைகளை தமிழக முதல்வர் வழங்கி இருகிறார்.
கொரனோ பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் நடப்பாண்டில் வழங்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் இலவச சைக்கிள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தையொட்டி இன்றைய தினத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதோடு அரசு பள்ளியில் உயர்கல்வி படிக்கும் 6.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும், இத்தகைய அறிவிப்பினால் தமிழகத்தில் அரசு பள்ளியில் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.