Connect with us

‘3 மாதத்தில் இலவச சைக்கிள்’…..பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

free cycle

Tamil Nadu

‘3 மாதத்தில் இலவச சைக்கிள்’…..பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2011 முதல் 2021 வரை அதிமுகவின் ஆட்சி நடைமுறையில் இருந்தது. இதில் ஏராளமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அந்த நலத்திட்டங்கள் தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்வதாக காணப்படுகிறது.

அதன்படி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தற்போதைய ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளதாக அரசு கூறியுள்ளது.

அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ பயிலும் மாணவ மாணவிகளுக்கு 3 மாதத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. சுமார் 6.18 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு வெறும் மூன்று மாதத்தில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

2021-2022 ஆம் கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top